caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 36

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:36

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ أَنَّ لَهُم مَّا فِى ٱلْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُۥ مَعَهُۥ لِيَفْتَدُوا۟ بِهِۦ مِنْ عَذَابِ يَوْمِ ٱلْقِيَٰمَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நிராகரித்தவர்கள் மறுமை நாளின் வேதனையிலிருந்து பிணைகொடுப்பதற்காக இப்பூமியிலுள்ள அனைத்தும், அத்துடன் அவை போன்றதும் அவர்களுக்கு இருந்(து அவற்றைக் கொடுத்)தாலும் அவர்களிடமிருந்து அவை) அங்கீகரிக்கப்படாது. இன்னும் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நிராகரித்தவர்கள் மறுமை நாளின் தண்டனையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காக, இப்பூமியிலுள்ள அனைத்தும், அத்துடன் அவை போன்றதும் அவர்களுக்கு இருந்து, அவர்கள் அவற்றை மீட்புத் தொகையாக கொடுத்தாலும் அவர்களிடமிருந்து (அவை) அங்கீகரிக்கப்படாது. இன்னும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi36. நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு இப்பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அதைப்போன்ற ஒரு பாகமும் (சொந்தமாக) இருந்து, அவர்கள் இவை அனைத்தையும் தாங்கள் மறுமை நாளின் வேதனையிலிருந்து தப்பிக்க பிரதியாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையே கிடைக்கும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70