caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Fath அத்தியாயம், வசனம் 5

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 111 · 48:5

لِّيُدْخِلَ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَيُكَفِّرَ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَكَانَ ذَٰلِكَ عِندَ ٱللَّهِ فَوْزًا عَظِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கைகொண்ட ஆண்களையும், நம்பிக்கைகொண்ட பெண்களையும் சொர்க்கங்களில் அவன் நுழைப்பதற்காகவும் அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை அகற்றுவதற்காகவும் (அவன் உமக்கு மகத்தான வெற்றியை கொடுத்தான்). அவற்றின் கீழ் (அந்த சொர்க்கங்களின் மரங்களையும் கட்டிடங்களையும் சுற்றி) நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாகத் தங்குவார்கள். இதுதான் அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக இருக்கின்றது.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கைகொண்ட ஆண்களையும், நம்பிக்கைகொண்ட பெண்களையும் சொர்க்கங்களில் அவன் பிரவேசிக்க வைப்பதற்காகவும் அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை போக்கிவிடுவதற்காகவும் (அவன் உமக்கு மகத்தான வெற்றியை கொடுத்தான்). அவற்றின் கீழ் (அந்த சொர்க்கங்களில் உள்ள மரங்களையும் கட்டிடங்களையும் சுற்றி) நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாகத் தங்குவார்கள். இதுதான் அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக (- நற்பாக்கியமாக) இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi5. நம்பிக்கைகொண்ட ஆண்களையும், பெண்களையும் (அல்லாஹ்) சொர்க்கங்களில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கி விடுவார்கள். அவர்களின் பாவங்களையும், அவர்களிலிருந்து நீக்கிவிடுவான். இது அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் மகத்தான ஒரு வெற்றியாக இருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70