caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Fath அத்தியாயம், வசனம் 4

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 111 · 48:4

هُوَ ٱلَّذِىٓ أَنزَلَ ٱلسَّكِينَةَ فِى قُلُوبِ ٱلْمُؤْمِنِينَ لِيَزْدَادُوٓا۟ إِيمَٰنًا مَّعَ إِيمَٰنِهِمْ وَلِلَّهِ جُنُودُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் அமைதியை (நிம்மதியை) இறக்கினான், அவர்கள் (முன்னர் இறக்கப்பட்ட சட்டங்களை நம்பிக்கை கொண்டும் செயல்படுத்தியும் வந்த முந்திய) தங்கள் நம்பிக்கையுடன் (புதிதாக இறக்கப்பட்ட சட்டங்களையும் நம்பிக்கை கொண்டு, செயல்படுத்தி) நம்பிக்கையால் மேலும் அதிகரிப்பதற்காக (அவன் நிம்மதியை இறக்கினான்). வானங்கள் இன்னும் பூமியின் இராணுவங்கள் அல்லாஹ்விற்கு உரியனவே. அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் அமைதியை (நிம்மதியை) இறக்கினான், அவர்கள் (முன்னர் இறக்கப்பட்ட சட்டங்களை நம்பிக்கை கொண்டும் செயல்படுத்தியும் வந்த) தங்கள் நம்பிக்கையுடன் (புதிதாக இறக்கப்பட்ட சட்டங்களையும் நம்பிக்கை கொண்டு, செயல்படுத்தி) மேலும் நம்பிக்கை அதிகரிப்பதற்காக (அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கினான்). வானங்கள் இன்னும் பூமியின் இராணுவங்கள் அல்லாஹ்விற்கே உரியன. அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. நம்பிக்கை கொண்டவர்களுடைய உள்ளங்களில் அவன்தான் சாந்தியையும், ஆறுதலையும் அளித்து, அவர்களுடைய நம்பிக்கை மேலும் அதிகரிக்கும்படி செய்தான். வானங்கள், பூமி முதலியவற்றிலுள்ள படைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (அவற்றைக்கொண்டு அவன் விரும்பியவர்களுக்கு உதவி புரிவான்.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனாக ஞானமுடையவனாக இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70