وَأُخْرَىٰ لَمْ تَقْدِرُوا۟ عَلَيْهَا قَدْ أَحَاطَ ٱللَّهُ بِهَا وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் வேறு பல (நாடுகளையும் அவன் உங்களுக்கு வாக்களித்துள்ளான்). (இப்போது நீங்கள்) அவற்றின் மீது (போர் தொடுத்து அவற்றை வெற்றி கொள்ள) நீங்கள் ஆற்றல் பெறவில்லை. அல்லாஹ் அவற்றை (எல்லாம்) திட்டமாக சூழ்ந்திருக்கின்றான். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும் (நாடுகளில்) வேறு பலவற்றையும் உங்களுக்கு வாக்களித்திருக்கிறான். (இப்போது) நீங்கள் அவற்றின் மீது (போர் தொடுத்து அவற்றை வெற்றி கொள்ள) ஆற்றல் பெறவில்லை. அல்லாஹ் அவற்றை (எல்லாம்) திட்டமாக சூழ்ந்திருக்கிறான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi21. (பாரசீகம், ரோம் முதலிய தேசங்களில் உங்களுக்கு) மற்றொரு வெற்றி (இருக்கிறது.) அதற்கு நீங்கள் இன்னும் தகுதியுடையவர்களாகவில்லை; எனினும், அல்லாஹ் அதை சூழ்ந்து கொண்டிருக்கிறான். அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாகவே இருக்கிறான்.