caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Fath அத்தியாயம், வசனம் 12

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 111 · 48:12

بَلْ ظَنَنتُمْ أَن لَّن يَنقَلِبَ ٱلرَّسُولُ وَٱلْمُؤْمِنُونَ إِلَىٰٓ أَهْلِيهِمْ أَبَدًا وَزُيِّنَ ذَٰلِكَ فِى قُلُوبِكُمْ وَظَنَنتُمْ ظَنَّ ٱلسَّوْءِ وَكُنتُمْ قَوْمًۢا بُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக, தூதரும், நம்பிக்கையாளர்களும் தங்கள் குடும்பங்களுக்கு அறவே திரும்ப மாட்டார்கள் என்று நீங்கள் எண்ணினீர்கள். இது (-இந்த எண்ணம்) உங்கள் உள்ளங்களில் அலங்கரிக்கப்பட்டு விட்டது. (அல்லாஹ் தன் தூதருக்கு உதவமாட்டான் என்று அல்லாஹ்வின் மீது) நீங்கள் கெட்ட எண்ணம் எண்ணினீர்கள். (இந்த தீய எண்ணத்தால் அல்லாஹ்வின் வேதனையில்) நீங்கள் அழிந்து போகின்ற மக்களாக இருக்கின்றீர்கள்.
Tamil Translation - Omar Sharifமாறாக, தூதரும், நம்பிக்கையாளர்களும் தங்கள் குடும்பங்களுக்கு ஒருபோதும் திரும்பவே மாட்டார்கள் என்று நீங்கள் எண்ணினீர்கள். இ(ந்த எண்ணமான)து உங்கள் உள்ளங்களில் அலங்கரிக்கப்பட்டு விட்டது. (அல்லாஹ், தன் தூதருக்கு உதவமாட்டான் என்று அல்லாஹ்வின் மீது) நீங்கள் கெட்ட எண்ணம் எண்ணினீர்கள். (இந்த தீய எண்ணத்தால் அல்லாஹ்வின் தண்டனையில்) நீங்கள் அழிந்து நாசமாகக்கூடிய மக்களாக இருக்கின்றீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. மாறாக, (அல்லாஹ்வுடைய) தூதரும் அவரை நம்பிக்கை கொண்டவர்களும் (போரிலிருந்து) தங்கள் குடும்பத்தார்களிடம் ஒரு காலத்திலும் திரும்பி வரவே மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள். (ஆதலால்தான் போருக்கு நீங்கள் வரவில்லை.) இதுவே உங்கள் மனதில் அழகாக்கப்பட்டது. ஆதலால், நீங்கள் கெட்ட எண்ணத்தையே எண்ணிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள்தான் அழிந்து போகும் மக்களாக இருந்தீர்கள்.''
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70