فَلَا تَهِنُوا۟ وَتَدْعُوٓا۟ إِلَى ٱلسَّلْمِ وَأَنتُمُ ٱلْأَعْلَوْنَ وَٱللَّهُ مَعَكُمْ وَلَن يَتِرَكُمْ أَعْمَٰلَكُمْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் பலவீனப்பட்டு, சமாதானத்திற்கு அழைத்து விடாதீர்கள்! நீங்கள்தான் மிக உயர்வானவர்கள் - வெற்றியாளர்கள், அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான். அவன் உங்கள் அமல்களை (அவற்றின் நன்மைகளை) உங்களுக்கு குறைக்கவே மாட்டான்.
Tamil Translation - Omar Sharifஆக, நீங்கள் பலவீனப்பட்டு, சமாதானத்திற்கு அழைத்து விடாதீர்கள்! நீங்கள்தான் மிக உயர்வானவர்கள் - வெற்றியாளர்கள். இன்னும், அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான். அவன் உங்கள் அமல்களை (அவற்றின் வெகுமதிகளை) உங்களுக்கு குறைக்கவே மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi35. (நம்பிக்கையாளர்களே! இழிவு தரக்கூடிய விதத்தில்) நீங்கள் தைரியம் இழந்து சமாதானத்தைக் கோராதீர்கள். (ஏனென்றால்,) நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுடன்தான் இருக்கிறான். உங்கள் நன்மைகளில் ஒன்றையும் அவன் உங்களுக்கு குறைத்துவிட மாட்டான்.