caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Muhammad அத்தியாயம், வசனம் 2

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 95 · 47:2

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَءَامَنُوا۟ بِمَا نُزِّلَ عَلَىٰ مُحَمَّدٍ وَهُوَ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ كَفَّرَ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்து, முஹம்மது நபியின் மீது இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொண்டார்களோ - அதுதான் (அவர் மீது இறக்கப்பட்ட அந்த வேதம்தான்) அவர்களின் இறைவனிடம் இருந்து (இறுதியாக) வந்த உண்மையாகும்- அவர்களின் பாவங்களை அவர்களை விட்டு அவன் போக்கி விடுவான்; அவர்களின் காரியத்தை அவன் சீர் செய்து விடுவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தார்களோ; இன்னும், முஹம்மத் (நபியின்) மீது இறக்கப்பட்டதை - அதுவோ அவர்களின் இறைவனிடம் இருந்து வந்த உண்மையாக இருக்கும் நிலையில் (அதை) - நம்பிக்கை கொண்டார்களோ அவர்களின் பாவங்களை அவர்களை விட்டு அல்லாஹ் போக்கி விடுவான். இன்னும், அவர்களின் காரியத்தை அவன் சீர் செய்து விடுவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. எவர்கள், (அல்லாஹ்வை) நம்பிக்கைகொண்டு நற்செயல்களையும் செய்து, முஹம்மது (நபி (ஸல்)) அவர்கள் மீது இறைவனால் இறக்கப்பட்ட உண்மையான இவ்வேதத்தையும் நம்பிக்கை கொண்டிருந்தார்களோ, அவர்கள் (செய்த) பாவத்திற்கு இதைப் பரிகாரமாக்கி, அவர்களுடைய காரியங்களையும் அவன் சீர்படுத்தி விட்டான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70