وَٱذْكُرْ أَخَا عَادٍ إِذْ أَنذَرَ قَوْمَهُۥ بِٱلْأَحْقَافِ وَقَدْ خَلَتِ ٱلنُّذُرُ مِنۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِۦٓ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّا ٱللَّهَ إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) ஆது சமுதாயத்தின் சகோதரரை (நபி ஹூதை) நினைவு கூர்வீராக! அவர் தனது மக்களை மணல் பாங்கான இடத்தில் (உள்ள அவர்களது இல்லங்களுக்கு அருகில் வைத்து) எச்சரித்த சமயத்தை நினைவு கூர்வீராக! இவருக்கு முன்னரும் இவருக்குப் பின்னரும் எச்சரிப்பாளர்கள் திட்டமாக சென்றுள்ளனர். (அவர் எச்சரித்து கூறியதாவது:) “அல்லாஹ்வை அன்றி யாரையும் நீங்கள் வணங்காதீர்கள். நிச்சயமாக நான் உங்கள் மீது பெரிய நாளின் தண்டனையை பயப்படுகின்றேன்.”
Tamil Translation - Omar Sharif(நபியே!) ஆது சமுதாயத்தின் சகோதரரை (-நபி ஹூதை) நினைவு கூர்வீராக! அவர் தனது மக்களை அஹ்காஃப் என்ற மணல் பாங்கான பிரதேசத்தில் (உள்ள அவர்களது இல்லங்களுக்கு அருகில் வைத்து) எச்சரித்த சமயத்தை நினைவு கூர்வீராக! இவருக்கு முன்னரும் எச்சரிப்பாளர்கள் திட்டமாக சென்றுள்ளனர். இவருக்குப் பின்னரும் (எச்சரிப்பாளர்கள் வந்துள்ளனர்). (அவர் எச்சரித்துக் கூறியதாவது:) “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர நீங்கள் யாரையும் வணங்காதீர்கள். நிச்சயமாக நான் உங்கள் மீது பெரிய (ஆபத்துகள் நிறைந்த) நாளின் தண்டனையை பயப்படுகின்றேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi21. (நபியே!) நீர் (ஹூத் நபியாகிய) ‘ஆது' உடைய சகோதரரை நினைவு கூறுவீராக. அவருக்கு முன்னும், பின்னும் தூதர்கள் பலர் (அவர்களிடம்) வந்திருக்கின்றனர். (அவர்) தன் மக்களை ‘அஹ்காஃப்' என்ற (மணற்பாங்கான) இடத்தில் (சந்தித்து), ‘‘அல்லாஹ்வைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்காதீர்கள். நிச்சயமாக மகத்தான நாளின் வேதனை உங்கள் மீது இறங்கி விடுமென்று நான் பயப்படுகிறேன்'' என்று அச்சமூட்டி எச்சரித்தார்.