caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zukhruf அத்தியாயம், வசனம் 80

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 63 · 43:80

أَمْ يَحْسَبُونَ أَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوَىٰهُم بَلَىٰ وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் அவர்களின் இரகசிய பேச்சையும் அவர்கள் கூடி (ஒன்றாக)ப் பேசுவதையும் செவியுற மாட்டோம் என்று அவர்கள் எண்ணுகின்றனரா? மாறாக, நமது தூதர்கள் அவர்களிடம் இருந்து (அவர்கள் பேசுகின்ற அனைத்தையும்) பதிவு செய்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifநாம் அவர்களின் இரகசிய பேச்சையும் அவர்கள் கூடி (ஒன்றாக)ப் பேசுவதையும் செவியுற மாட்டோம் என்று அவர்கள் எண்ணுகிறார்களா? ஏன் இல்லை, நமது (வானவத்) தூதர்கள் அவர்களிடம் இருந்தவர்களாக (அவர்கள் தனிமையில்; அல்லது, சபையில் பேசுகின்ற அனைத்தையும்) பதிவு செய்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi80. அல்லது அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்து வைத்திருப்பதும் அல்லது (தங்களுக்குள்) இரகசியமாகப் பேசுவதையும் நாம் செவியேற்க மாட்டோம் என்று அவர்கள் நினைக்கின்றனரா? அவ்வாறில்லை! அவர்களிடத்தில் இருக்கும் நம் வானவர்கள் (ஒவ்வொன்றையும்) பதிவு செய்துகொண்டே வருகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70