وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحْمَٰنِ مَثَلًا ظَلَّ وَجْهُهُۥ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களில் ஒருவருக்கு, அவர் ரஹ்மானுக்கு எதை தன்மையாக விவரித்தாரோ (-வானவர்கள் அல்லாஹ்வின் பெண் குழந்தைகள் என்று) அதை (-அவருக்கு பெண் பிள்ளை பிறந்திருப்பதை) நற்செய்தி கூறப்பட்டால் அவரது முகம் கருப்பாக மாறிவிடுகிறது. இன்னும் அவர் துக்கப்படுகிறார்.
Tamil Translation - Omar Sharifஅவர்களில் ஒருவருக்கு - அவர் ரஹ்மானுக்கு எதை தன்மையாக விவரித்தாரோ அதைக் கொண்டு - நற்செய்தி கூறப்பட்டால் அவரது முகம் கருப்பாக மாறிவிடுகிறது. இன்னும், அவர் துக்கப்படுகிறார். (இணைவைக்கின்ற மனிதன் தனக்கு பெண் பிள்ளையை விரும்புவதில்லை. ஆனால், அல்லாஹ்விற்கு பெண் பிள்ளைகள் இருப்பதாக கற்பனை செய்கிறான்.)
Tamil Translation - Abdulhamid Baqawi17. (அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்கு (அவனுடைய சந்ததி என்று) அவர்கள் கற்பனை செய்யும் (பெண்) மக்கள் அவர்களில் எவருக்கும் (பிறந்ததாக) நற்செய்தி கூறப்பட்டால், (பெண் மக்களை இழிவாகக் கருதும்) அவருக்கு ஏற்படும் கோபத்தால் அவருடைய முகம் கருத்து விடுகிறது.