إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَظْلِمُونَ ٱلنَّاسَ وَيَبْغُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ أُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகுற்றமெல்லாம் மக்களுக்கு அநியாயம் செய்பவர்கள் மீதும், பூமியில் அநியாயமாக வரம்பு மீறுகிறவர்கள் மீதும்தான். அவர்களுக்கு வலிதரக்கூடிய வேதனை உண்டு.
Tamil Translation - Omar Sharifகுற்றமெல்லாம் மக்கள் மீது (முதலில்) அநியாயம் செய்பவர்கள் மீதும், பூமியில் அநியாயமாக எல்லை மீறுகிறவர்கள் (-கலகம் செய்வதிலும் மக்களுக்கு இன்னல் செய்வதிலும் ஈடுபடுகிறவர்கள்) மீதும்தான். அத்தகையோர், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi42. குற்றமெல்லாம் அளவு மீறி மனிதர்கள் மீது அநியாயம் செய்து, நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்பவர்கள் மீதுதான். இத்தகையவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.