caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shura அத்தியாயம், வசனம் 29

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 62 · 42:29

وَمِنْ ءَايَٰتِهِۦ خَلْقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَثَّ فِيهِمَا مِن دَآبَّةٍ وَهُوَ عَلَىٰ جَمْعِهِمْ إِذَا يَشَآءُ قَدِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களில் இருந்து அவ்விரண்டில் எவற்றை அவன் பரத்தி இருக்கின்றானோ அவையும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான். அவன் நாடுகின்ற போது அவர்களை (மறுமையில்) ஒன்று சேர்ப்பதற்கும் அவன் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifவானங்களும் பூமியும் படைக்கப்பட்டதும் அவ்விரண்டில் உயிரினங்களில் எவற்றை அவன் (படைத்து, பல பகுதிகளில்) பரத்தி இருக்கிறானோ அவையும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான். இன்னும், அவன் நாடும்போது அவர்களை (மறுமையில்) ஒன்று சேர்ப்பதற்கும் அவன் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், அவற்றில் கால்நடை (முதலிய பல உயிரினங்)களை (ஆங்காங்கு) பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைகளாகும். ஆகவே, அவன் விரும்பியபோது (மரணித்த பின்னரும்) அவற்றை ஒன்று சேர்க்க ஆற்றுலுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70