مَن كَانَ يُرِيدُ حَرْثَ ٱلْـَٔاخِرَةِ نَزِدْ لَهُۥ فِى حَرْثِهِۦ وَمَن كَانَ يُرِيدُ حَرْثَ ٱلدُّنْيَا نُؤْتِهِۦ مِنْهَا وَمَا لَهُۥ فِى ٱلْـَٔاخِرَةِ مِن نَّصِيبٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionயார் மறுமையின் விளைச்சலை நாடுகின்றவராக இருப்பாரோ அவருக்கு அவருடைய விளைச்சலில் (-நன்மைக்குரிய கூலியில்) நாம் அதிகப்படுத்துவோம். யார் உலகத்தின் விளைச்சலை நாடுகின்றவராக இருப்பாரோ அவருக்கு அதில் இருந்து (-உலக ஆதாயத்தில் இருந்து) நாம் கொடுப்போம். அவருக்கு மறுமையில் (அவர் செய்த நன்மையில் இருந்து) எவ்வித பங்கும் இல்லை.
Tamil Translation - Omar Sharifயார் மறுமையின் விளைச்சலை நாடுகிறவராக இருக்கிறாரோ அவருக்கு அவருடைய விளைச்சலில் (-நன்மைக்குரிய கூலியில்) நாம் அதிகப்படுத்துவோம். இன்னும், யார் (தனது நல்லமல்களுக்கு) உலகத்தின் விளைச்சலை நாடுகிறவராக இருக்கிறாரோ அவருக்கு அ(வர் விரும்புகிற உலக செல்வத்)திலிருந்து நாம் கொடுப்போம். அவருக்கு மறுமையில் (அவர் செய்த நன்மையிலிருந்து) எவ்வித பங்கும் இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi20. எவன் மறுமைக்காகப் பயிரிட விரும்புகிறானோ, அவனுடைய பயிரின் விளைச்சலை நாம் அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மைக்காக (மட்டும்) பயிரிட விரும்புகிறானோ, நாம் அவனுக்கும் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம். எனினும், அவனுக்கு மறுமையில் ஒரு பாக்கியமுமில்லை.