إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள் - அவர்களுக்கு முடிவற்ற நற்கூலி உண்டு.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ - அவர்களுக்கு முடிவுறாத வெகுமதிகள் உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi8. (ஆயினும்,) எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ (அவர்கள்தான் மறுமையை நம்பக்கூடியவர்கள்.) அவர்களுக்கு நிச்சயமாக (ஒரு காலத்திலும்) முடிவுறாத (நிலையான) கூலியுண்டு.