caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Fussilat அத்தியாயம், வசனம் 45

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 61 · 41:45

وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ فَٱخْتُلِفَ فِيهِ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِىَ بَيْنَهُمْ وَإِنَّهُمْ لَفِى شَكٍّ مِّنْهُ مُرِيبٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக மூஸாவிற்கு நாம் வேதத்தை கொடுத்தோம். ஆனால், அதில் முரண்பாடு செய்யப்பட்டது. உமது இறைவனிடமிருந்து ஒரு வாக்கு முந்தியிருக்கவில்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே வேதனையைக் கொண்டு) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். இன்னும் நிச்சயமாக அவர்கள் இதில் (-இந்த வேதத்தில்) மிக ஆழமான சந்தேகத்தில் இருக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக மூஸாவிற்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம். ஆக, அதில் முரண்பாடு செய்யப்பட்டது. உமது இறைவனிடமிருந்து ஒரு வாக்கு முந்தியிருக்கவில்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். இன்னும், நிச்சயமாக அவர்கள் இ(ந்த வேதத்)தில் மிக ஆழமான சந்தேகத்தில்தான் இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi45. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத்) வேதத்தைக் கொடுத்திருந்தோம். (அவருடைய மக்களால்) அதில் பல பிரிவுகள் உண்டு பண்ணப்பட்டது. (‘‘அவர்களை விசாரித்துத் தீர்ப்புக் கூறுவது மறுமையில்தான்' என்று) உமது இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரை) முடிந்தே போயிருக்கும். நிச்சயமாக இவர்களும் அதில் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70