إِنَّ ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِىٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيْرِ سُلْطَٰنٍ أَتَىٰهُمْ إِن فِى صُدُورِهِمْ إِلَّا كِبْرٌ مَّا هُم بِبَٰلِغِيهِ فَٱسْتَعِذْ بِٱللَّهِ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக தங்களிடம் வந்த எவ்வித ஆதாரமும் இன்றி அல்லாஹ்வின் அத்தாட்சிகள் விஷயத்தில் தர்க்கம் செய்பவர்கள் -அவர்களின் உள்ளங்களில் பெருமையைத் தவிர வேறு ஏதும் இல்லை. அவர்கள் அந்த பெருமையை அடையவும் முடியாது. ஆகவே, அல்லாஹ்விடம் நீர் பாதுகாப்புத் தேடுவீராக! நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் தங்களிடம் எவ்வித ஆதாரமும் வராமல் இருக்க அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் தர்க்கம் செய்கிறார்களோ, அவர்களின் உள்ளங்களில் பெருமையைத் தவிர இல்லை. அவர்கள் அந்த பெருமையை அடையவும் முடியாது. ஆகவே, அல்லாஹ்விடம் நீர் பாதுகாப்புத் தேடுவீராக! நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi56. நிச்சயமாக எவர்கள் தங்களிடம் ஆதாரம் ஏதும் இல்லாதிருக்க அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றித் தர்க்கிக்கிறார்களோ, அவர்களுடைய உள்ளங்களில் (வெறும்) பெருமையைத் தவிர வேறொன்றுமில்லை. (அப்பெருமையை) அவர்கள் அடையவும் மாட்டார்கள். ஆகவே, (உம்மை) பாதுகாத்துக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் நீர் கோருவீராக. நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.