caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaafir அத்தியாயம், வசனம் 50

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 60 · 40:50

قَالُوٓا۟ أَوَلَمْ تَكُ تَأْتِيكُمْ رُسُلُكُم بِٱلْبَيِّنَٰتِ قَالُوا۟ بَلَىٰ قَالُوا۟ فَٱدْعُوا۟ وَمَا دُعَٰٓؤُا۟ ٱلْكَٰفِرِينَ إِلَّا فِى ضَلَٰلٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறுவார்கள்: தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் உங்கள் தூதர்கள் வந்திருக்கவில்லையா? அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ஏன் வரவில்லை! (கண்டிப்பாக வந்தார்கள்.) அவர்கள் கூறுவார்கள்: (உங்கள் அனைவருக்கும்) நீங்கள் பிரார்த்தனை கேளுங்கள். காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் தவிர இல்லை.
Tamil Translation - Omar Sharif(அந்த காவலாளிகள்) கூறுவார்கள்: “தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் உங்கள் தூதர்கள் வந்திருக்கவில்லையா?” அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “ஏன் இல்லை! (கண்டிப்பாக வந்தார்கள்.)” அவர்கள் கூறுவார்கள்: “(உங்கள் அனைவருக்காகவும்) நீங்கள் பிரார்த்தனை கேளுங்கள்!” காஃபிர்கள் – நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை (எந்த பலனுமளிக்காது. ஏனெனில், அவர்களின் பிரார்த்தனை) வீணான வழிகேட்டில்தான் இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi50. அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) ‘‘உங்களிடம் வந்த (இறைவனுடைய) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வரவில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கு இவர்கள் ‘‘ஆம்! மெய்தான் (வந்தார்கள்)'' என்று கூறுவார்கள். அதற்கவர்கள், ‘‘அவ்வாறாயின், (நாங்கள் இறைவனிடம் கேட்பதற்கில்லை.) நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்'' என்று கூறிவிடுவார்கள். இந்நிராகரிப்பவர்களின் பிரார்த்தனை ஒரு பயனும் அளிக்காது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70