caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaafir அத்தியாயம், வசனம் 47

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 60 · 40:47

وَإِذْ يَتَحَآجُّونَ فِى ٱلنَّارِ فَيَقُولُ ٱلضُّعَفَٰٓؤُا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا نَصِيبًا مِّنَ ٱلنَّارِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் நரகத்தில் ஒருவருக்கொருவர் வாய்ச் சண்டை செய்யும் போது பலவீனமானவர்கள் பெருமை கொண்டிருந்தவர்களுக்கு கூறுவார்கள்: நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம். ஆகவே, நரகத்தில் இருந்து ஒரு பகுதி (கொஞ்சம் வேதனை)யை நீங்கள் எங்களை விட்டு தடுப்பீர்களா?
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் நரகத்தில் ஒருவருக்கொருவர் வாய்ச் சண்டை செய்யும்போது, (வழிகெட்ட) பலவீனர்கள் பெருமை அடித்த (தங்கள் தலை)வர்களை நோக்கி கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம். ஆகவே, நரகத்திலிருந்து ஒரு பகுதி (சிறிது தண்டனை)யை நீங்கள் எங்களை விட்டு தடுப்பீர்களா?”
Tamil Translation - Abdulhamid Baqawi47. நரகத்தில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (அவர்களில் உள்ள) பலவீனமானவர்கள் பெருமையடித்துக் கொண்டிருந்த (தலை)வர்களை நோக்கி ‘‘மெய்யாகவே நாங்கள் உங்களையே பின்பற்றியிருந்தோம். இன்றைய தினம் நரகத்தி(ன் வேதனையி)லிருந்து ஒரு சிறிதேனும் எங்களை விட்டு நீங்கள் தடுத்துவிட முடியுமா?'' என்று கேட்பார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70