أَسْبَٰبَ ٱلسَّمَٰوَٰتِ فَأَطَّلِعَ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّى لَأَظُنُّهُۥ كَٰذِبًا وَكَذَٰلِكَ زُيِّنَ لِفِرْعَوْنَ سُوٓءُ عَمَلِهِۦ وَصُدَّ عَنِ ٱلسَّبِيلِ وَمَا كَيْدُ فِرْعَوْنَ إِلَّا فِى تَبَابٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களின் வாசல்களில் நான் (ஏறி) மூஸாவின் கடவுளை எட்டிப்பார்க்க வேண்டும். நிச்சயமாக நான் அவரை பொய்யராகவே கருதுகிறேன். இவ்வாறுதான் ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அலங்காரமாக்கப்பட்டது. அவன் நேரான பாதையை விட்டு தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தவிர இல்லை.
Tamil Translation - Omar Sharif“(அதாவது,) வானங்களின் வாசல்களுக்கு (நான் சென்றடைய வேண்டும்). அப்படி ஏறிவிட்டால் நான் மூஸாவின் கடவுளை எட்டிப்பார்த்துவிடுவேன். இன்னும், நிச்சயமாக நான் அவரை பொய்யராகவே கருதுகிறேன்.” இவ்வாறுதான், ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அலங்காரமாக்கப்பட்டது. இன்னும், அவன் நேரான பாதையை விட்டு தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தவிர இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi37. மூஸாவுடைய ஆண்டவனை நான் பார்க்க வேண்டும். அவர் பொய் சொல்கிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்'' என்று கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு, அவனுடைய தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு, நேரான வழியிலிருந்தும் அவன் தடுக்கப்பட்டு விட்டான். ஃபிர்அவ்னுடைய சூழ்ச்சி எல்லாம் (வீண்) அழிவிலே தவிர (வேறொன்றிலும்) இருக்கவில்லை.