ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانَت تَّأْتِيهِمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَكَفَرُوا۟ فَأَخَذَهُمُ ٱللَّهُ إِنَّهُۥ قَوِىٌّ شَدِيدُ ٱلْعِقَابِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதற்கு காரணம், நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் நிராகரித்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களை தண்டித்தான். நிச்சயமாக அவன் வலிமை மிக்கவன், தண்டிப்பதில் கடுமையானவன்.
Tamil Translation - Omar Sharifஅதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் - அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்து கொண்டிருந்தார்கள். ஆக, அவர்கள் நிராகரித்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களை தண்டித்தான். நிச்சயமாக அவன் வலிமை மிக்கவன், தண்டிப்பதில் கடுமையானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்களிடம், தெளிவான அத்தாட்சிகளுடன் நம் தூதர்கள் வந்து கொண்டிருந்தனர். (அவர்களை) இவர்கள் நிராகரித்து விட்டனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். நிச்சயமாக அவன் மிக பலமுடையவன், (பாவிகளை) வேதனை செய்வதில் மிக கடினமானவன்.