فَقَٰتِلْ فِى سَبِيلِ ٱللَّهِ لَا تُكَلَّفُ إِلَّا نَفْسَكَ وَحَرِّضِ ٱلْمُؤْمِنِينَ عَسَى ٱللَّهُ أَن يَكُفَّ بَأْسَ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَٱللَّهُ أَشَدُّ بَأْسًا وَأَشَدُّ تَنكِيلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவீராக! உம்மைத் தவிர நீர் பணிக்கப்படமாட்டீர். (இறைகட்டளையை நீர் ஏற்று நடப்பீராக. பிறரை ஏற்று நடக்க வைப்பது உமது கடமையல்ல). நம்பிக்கையாளர்களை (போருக்கு) தூண்டுங்கள். நிராகரிப்பாளர்களின் ஆற்றலை அல்லாஹ் தடுக்கக்கூடும். அல்லாஹ் ஆற்றலால் மிகக் கடுமையானவன், தண்டிப்பதாலும் மிகக் கடுமையானவன்.
Tamil Translation - Omar Sharifஆக, (நபியே!) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவீராக! நீர் உம்மைத் தவிர (பிறரை) கட்டாயப்படுத்த முடியாது. (இறை கட்டளையை நீர் ஏற்று நடப்பீராக. பிறரை ஏற்று நடக்க வைப்பது உமது கடமையல்ல.) இன்னும், நம்பிக்கையாளர்களை (போருக்கு) தூண்டுவீராக! நிராகரிப்பாளர்களின் வலிமையை (-அவர்களின் தாக்குதலை) அல்லாஹ் தடுத்து விடுவான். அல்லாஹ் வலிமையிலும் (எதிரிகளை தாக்குவதிலும்) மிகக் கடுமையானவன்; இன்னும், (அவர்களை) தண்டிப்பதிலும் மிகக் கடுமையானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi84. (நபியே!) நீர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவீராக. நீர் உம்மைத் தவிர (மற்றெவரையும் போருக்குச் செல்லும்படி) நிர்ப்பந்திப்பதற்கில்லை. (ஆயினும்,) நம்பிக்கையாளர்களை (போருக்குச் செல்ல) தூண்டுவீராக. நிராகரிப்பவர்களின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான். (ஏனென்றால்) அல்லாஹ் போர் செய்வதில் மிக வல்லவன், தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்.