أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُم بَلِ ٱللَّهُ يُزَكِّى مَن يَشَآءُ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) தங்களை (தாமே) பரிசுத்தப்படுத்துபவர்களை (நீர்) கவனிக்கவில்லையா? மாறாக, அல்லாஹ் தான் நாடியவர்களை பரிசுத்தமாக்குகிறான். (அவர்கள்) (பேரீத்தங்கொட்டையின் சிறிய) வெள்ளை நூலளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) “தங்களை (தாமே உயர்வாக பேசி) பரிசுத்தப்படுத்துபவர்களை (நீர்) கவனிக்கவில்லையா?” மாறாக அல்லாஹ், தான் நாடியவர்களை பரிசுத்தமாக்குகிறான். அவர்களுக்கு (பேரீச்சங் கொட்டையின் சிறிய) வெள்ளை நூலளவும் அநீதி செய்யப்படாது.
Tamil Translation - Abdulhamid Baqawi49. (நபியே!) பரிசுத்தவான்களென்று எவர்கள் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள் கூறுவது சரியன்று.) அல்லாஹ், தான் விரும்பிய (நல்ல)வர்களைத்தான் பரிசுத்தமாக்கி வைப்பான். (இவ்விஷயத்தில் எவரும்) ஓர் அணுவளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள்.