caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 166

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:166

لَّٰكِنِ ٱللَّهُ يَشْهَدُ بِمَآ أَنزَلَ إِلَيْكَ أَنزَلَهُۥ بِعِلْمِهِۦ وَٱلْمَلَٰٓئِكَةُ يَشْهَدُونَ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அல்லாஹ் சாட்சி கூறுகிறான் உம்மீது அவன் இறக்கியதற்கு, அதை அவனுடைய அறிவைக் கொண்டே இறக்கினான் என்று. (அவ்வாறே) வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.
Tamil Translation - Omar Sharifஎன்றாலும், அல்லாஹ் உம்மீது இறக்கியதற்கு அல்லாஹ்வே சாட்சி கூறுகிறான், - “அதை அவனுடைய அறிவு ஞானத்தைக் கொண்டே இறக்கி இருக்கிறான்” என்று. (அவ்வாறே) வானவர்களும் (உமக்கு இறக்கப்பட்ட வேதத்தின் உண்மைக்கு) சாட்சி கூறுகிறார்கள். சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi166. (நபியே! இவர்கள் உம்மை நிராகரித்து விட்டதனால் ஆவதென்ன?) உம்மீது அருளப்பட்ட வேதம் உண்மையானதென்றும் (உமது மேலான தகுதியை) அறிந்தே அதை (உம்மீது அவன்) இறக்கிவைத்தான் என்றும் அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான். (அவ்வாறே) வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். அல்லாஹ்வே போதுமான சாட்சி ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70