caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 164

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:164

وَرُسُلًا قَدْ قَصَصْنَٰهُمْ عَلَيْكَ مِن قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ ٱللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(பல) தூதர்களை (அனுப்பினோம்.) அவர்களை முன்னர் உமக்கு விவரித்தோம். இன்னும் பல தூதர்களை (அனுப்பினோம்.) அவர்களை உமக்கு விவரிக்கவில்லை. மூஸாவுடன் அல்லாஹ் பேசினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும் (பல) தூதர்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்திருக்கிறோம். அவர்களை முன்னர் உமக்கு விவரித்தோம். இன்னும், பல தூதர்களுக்கு வஹ்யி அறிவித்திருக்கிறோம். அவர்களை உமக்கு நாம் விவரிக்கவில்லை. இன்னும், மூஸாவுடன் அல்லாஹ் நேரடியாக பேசினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi164. (இவர்களைப்போல் இன்னும் வேறு) பல நபிமார்களையும் (நாம் அனுப்பி வைத்தோம்). அவர்களுடைய சரித்திரங்களையும் இதற்கு முன்னர் நாம் உமக்குக் கூறியிருக்கிறோம். வேறு பல நபிமார்களையும் (நாம் அனுப்பியிருக்கிறோம். எனினும்) அவர்களுடைய சரித்திரங்களை நாம் உமக்குக் கூறவில்லை. மூஸாவு(க்கு வஹ்யி அறிவித்தது)டன் அல்லாஹ் பேசியும் இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70