caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 137

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:137

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ثُمَّ كَفَرُوا۟ ثُمَّ ءَامَنُوا۟ ثُمَّ كَفَرُوا۟ ثُمَّ ٱزْدَادُوا۟ كُفْرًا لَّمْ يَكُنِ ٱللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سَبِيلًۢا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, பிறகு நிராகரித்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பிறகு நிராகரித்து பிறகு நிராகரிப்பை அதிகப்படுத்தினார்களோ (அவர்கள் மரணித்துவிட்டால்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பதற்கில்லை. (வேதனையிலிருந்து தப்பிக்க) அவர்களுக்கு ஒரு வழியையும் காட்டுவதற்கில்லை.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, பிறகு நிராகரித்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பிறகு நிராகரித்து பிறகு நிராகரிப்பை அதிகப்படுத்தினார்களோ (அவர்கள் மரணித்துவிட்டால்) அவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இன்னும் (தண்டனையிலிருந்து தப்பிக்க) அவர்களுக்கு ஒரு வழியையும் காட்ட மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi137. எவர்கள், நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்து, பின்னர் நம்பிக்கை கொண்டு (அதன்) பின்னரும் நிராகரித்து (அந்த) நிராகரிப்பையே மென்மேலும் அதிகரிக்கிறார்களோ அவர்(களின் குற்றங்)களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பதில்லை. அன்றி, (அவர்களின் தீயசெயல்களின் காரணமாக) அவர்களை நேரான பாதையில் செலுத்தவுமாட்டான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70