يَسْتَخْفُونَ مِنَ ٱلنَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ ٱللَّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَىٰ مِنَ ٱلْقَوْلِ وَكَانَ ٱللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(இவர்கள் தம் குற்றத்தை) மக்களிடம் மறைக்கத் தேடுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் மறைக்கத்தேடுவதில்லை. பேச்சில் (அல்லாஹ்) விரும்பாததை இவர்கள் இரவில் சதித்திட்டம் செய்யும்போது அவன் அவர்களுடன் இருக்கிறான். அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்(தறிந்)தவனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஇவர்கள் (தம் குற்றத்தை) மக்களிடம் மறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்விடம் மறைக்க முயற்சிப்பதில்லை. அல்லாஹ் விரும்பாத பேச்சை இவர்கள் இரவில் சதித்திட்டம் செய்யும்போது அவன் அவர்களுடன் இருந்தான். இன்னும், அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்(தறிந்)தவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi108. இவர்கள் (சதி செய்யும் தங்கள் குற்றத்தை) மனிதர்களுக்கு மறைக்கிறார்கள். எனினும், (அதை) அல்லாஹ்வுக்கு மறைத்துவிட முடியாது. (அல்லாஹ்) விரும்பாத விஷயங்களைக்கொண்டு இவர்கள் இரவெல்லாம் பேசி சதி ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன்தான் இருக்கிறான். அல்லாஹ் அவர்களுடைய (சதிச்) செயலை(த் தன் ஞானத்தால்) சூழ்ந்துகொண்டும் இருக்கிறான்.