وَتَرَى ٱلْمَلَٰٓئِكَةَ حَآفِّينَ مِنْ حَوْلِ ٱلْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِىَ بَيْنَهُم بِٱلْحَقِّ وَقِيلَ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) வானவர்களை அர்ஷை சுற்றி சூழ்ந்தவர்களாக இருப்பதை பார்ப்பீர்கள். அவர்கள் தங்கள் இறைவனின் புகழை துதிப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் சத்தியமான முறையில் தீர்ப்பளிக்கப்படும். அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறப்படும்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) வானவர்கள் அர்ஷை சுற்றிலும் சூழ்ந்திருப்பவர்களாக இருப்பதை நீர் பார்ப்பீர். அவர்கள் தங்கள் இறைவனின் புகழை துதிப்பார்கள். இன்னும், அவர்களுக்கு மத்தியில் சத்தியமான முறையில் (மிக நீதமாக) தீர்ப்பளிக்கப்படும். இன்னும், அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறப்படும்.
Tamil Translation - Abdulhamid Baqawi75. (நபியே! அந்நாளில்) வானவர்கள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து, துதி செய்தவண்ணம் ‘அர்ஷை' சூழ்ந்து நிற்பதை நீர் காண்பீர். அச்சமயம் அவர்களுக்கிடையில் நியாயமாகவே தீர்ப்பளிக்கப்பட்டு, ‘‘அகிலத்தார் அனைவரின் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் சொந்தமானது'' என்று (அனைவராலும் துதி செய்து புகழ்ந்து) கூறப்படும்.