caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zumar அத்தியாயம், வசனம் 58

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 59 · 39:58

أَوْ تَقُولَ حِينَ تَرَى ٱلْعَذَابَ لَوْ أَنَّ لِى كَرَّةً فَأَكُونَ مِنَ ٱلْمُحْسِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது அது (-அந்த ஆன்மா) வேதனையை கண்ணால் பார்க்கும் நேரத்தில் நிச்சயமாக எனக்கு (உலகத்திற்கு) திரும்பி வரமுடிந்தால் நானும் நல்லவர்களில் ஆகிவிடுவேன் என்று (எந்த ஓர் ஆன்மாவும்) சொல்லாமல் இருப்பதற்காக (இந்த உலகத்தில் நீங்கள் வாழும் போதே அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்!)
Tamil Translation - Omar Sharifஅல்லது, “அந்த ஆன்மா தண்டனையை கண்ணால் பார்க்கும் நேரத்தில் நிச்சயமாக எனக்கு (உலகத்திற்கு) திரும்பி வரமுடிந்தால் நானும் நல்லவர்களில் ஆகி விடுவேன்” என்று (எந்த ஓர் ஆன்மாவும்) சொல்வதற்கு முன்பாகவே (நீங்கள் அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்!)
Tamil Translation - Abdulhamid Baqawi58. அல்லது, (உங்களில் எவரும்) வேதனையைக் (கண்ணால்) கண்ட சமயத்தில் ‘‘(இவ்வுலகத்திற்கு) நான் திரும்பிச் செல்ல வழி உண்டா? அவ்வாறாயின் நான் நல்லவர்களில் ஆகிவிடுவேன்'' என்று கூறாமல் இருப்பதற்காகவும் (உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவன் இறக்கிய வேதத்தை பின்பற்றுங்கள்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70