فَإِذَا مَسَّ ٱلْإِنسَٰنَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَٰهُ نِعْمَةً مِّنَّا قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلْمٍۭ بَلْ هِىَ فِتْنَةٌ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவன் நம்மிடம் பிரார்த்திக்கின்றான். பிறகு, நாம் அவனுக்கு நம்மிடமிருந்து ஒரு அருட்கொடையை வழங்கினால், அவன் கூறுகிறான்: இது எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் (என்னை அதற்கு தகுதி உள்ளவனாக அல்லாஹ்) அறிந்ததினால்தான். மாறாக, அது ஒரு சோதனையாகும். என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (தங்களுக்கு இறைவன் ஏன் இந்த செல்வத்தைக் கொடுத்தான் என்று) அறியமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவன் நம்மிடம் பிரார்த்திக்கிறான். பிறகு, நாம் அவனுக்கு நம்மிடமிருந்து ஒரு அருட்கொடையை வழங்கினால், அவன் கூறுகிறான்: “இது எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் (நான் அதற்கு தகுதியானவன் என்ற அல்லாஹ் உடைய) அறிவின்படிதான். (அவன் கூறுவது போன்றல்ல.) மாறாக, (அவனுக்கு) அது ஒரு சோதனையாகும். என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (செல்வம் கொடுக்கப்பட்டதன் நோக்கத்தை) அறியமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi49. மனிதனை ஏதும் தீங்கு அணுகும் சமயத்தில், (அதை நீக்கும்படி) நம்மிடமே அவன் பிரார்த்தனை செய்கிறான். (அதை நீக்கி) அவனுக்கு நாம் ஒரு அருள் புரிந்தாலோ, ‘‘தான் அதை அடைந்ததெல்லாம் தன் அறிவின் சாமர்த்தியத்தால்தான்'' என்று கூறுகிறான். (அது சரி) அல்ல; அதுவும் (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும். ஆயினும், அவர்களில் அதிகமானோர் இதை அறிந்து கொள்வதில்லை.