caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zumar அத்தியாயம், வசனம் 43

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 59 · 39:43

أَمِ ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ شُفَعَآءَ قُلْ أَوَلَوْ كَانُوا۟ لَا يَمْلِكُونَ شَيْـًٔا وَلَا يَعْقِلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வை அன்றி (பிற தெய்வங்களை வணங்குபவர்கள் அல்லாஹ்விடம் தங்களுக்கு) பரிந்துரை செய்பவர்களாக (அவற்றை) எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! அவர்கள் (-அந்த தெய்வங்கள்) எதற்கும் (-தங்களுக்கு எதையும் செய்துகொள்வதற்கு) சக்தியற்றவர்களாகவும் சிந்தித்து புரியாதவர்களாகவும் இருந்தாலுமா?
Tamil Translation - Omar Sharif(இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை அன்றி (அல்லாஹ்விடம் தங்களுக்கு) பரிந்துரை செய்பவர்களை எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! “அவர்கள் (-அந்த தெய்வங்கள்) எதற்கும் சக்தியற்றவர்களாகவும் சிந்தித்து புரியாதவர்களாகவும் இருந்தாலுமா (நீங்கள் அவர்களை பரிந்துரையாளர்களாக எடுத்துக்கொள்வீர்கள்)?”
Tamil Translation - Abdulhamid Baqawi43. இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குச்) சிபாரிசு செய்பவர்கள் என்று (எண்ணி) எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? ‘‘அவை எதற்கும் சக்தி அற்றதாக, எதையும் அறியக்கூடிய உணர்ச்சி அற்றதாக இருந்தாலுமா (அவற்றை நீங்கள் உங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எடுத்துக் கொள்வீர்கள்)?'' என்று (நபியே!) அவர்களைக் கேட்பீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70