caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zumar அத்தியாயம், வசனம் 41

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 59 · 39:41

إِنَّآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ لِلنَّاسِ بِٱلْحَقِّ فَمَنِ ٱهْتَدَىٰ فَلِنَفْسِهِۦ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَمَآ أَنتَ عَلَيْهِم بِوَكِيلٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் மக்களுக்காக உம்மீது இந்த வேதத்தை சத்தியத்துடன் இறக்கினோம். யார் நேர்வழி செல்கிறாரோ அவர் தனது (ஆன்மாவின்) நன்மைக்காகத்தான் செல்கிறார். யார் வழிகெடுகிறாரோ அவர் வழி கெடுவதெல்லாம் அதற்கு (-தனது ஆன்மாவிற்கு) பாதகமாகத்தான். (நபியே!) நீர் அவர்கள் மீது கண்காணிப்பவராக (அவர்களை பாதுகாப்பவராக) இல்லை.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நாம் மக்களுக்காக உம்மீது இந்த வேதத்தை சத்தியத்துடன் இறக்கினோம். ஆக, யார் நேர்வழி செல்கிறாரோ அவர் தனது (ஆன்மாவின்) நன்மைக்காகத்தான் நேர்வழி செல்கிறார். யார் வழிகெடுகிறாரோ அவர் வழி கெடுவதெல்லாம் அதற்கு (-தனது ஆன்மாவிற்கு) பாதகமாகத்தான். (நபியே!) நீர் அவர்கள் மீது கண்காணிப்பவராக (-அவர்களை நிர்ப்பந்திப்பவராக) இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi41. (நபியே!) நிச்சயமாக நாம் மனிதர்களின் நன்மைக்காகவே முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம் மீது இறக்கி வைத்தோம். ஆகவே, எவன் இதைப் பின்பற்றி நடக்கிறானோ, அது அவனுக்கே நன்று; எவன் (இதிலிருந்து) வழிதவறி விடுகிறானோ அவன், வழி தவறியது அவனுக்கே தீங்காக முடியும். (நபியே!) நீர் அவர்கள் மீது பொறுப்பாளர் அல்ல.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70