وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ لَيَقُولُنَّ ٱللَّهُ قُلْ أَفَرَءَيْتُم مَّا تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ إِنْ أَرَادَنِىَ ٱللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَٰشِفَٰتُ ضُرِّهِۦٓ أَوْ أَرَادَنِى بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَٰتُ رَحْمَتِهِۦ قُلْ حَسْبِىَ ٱللَّهُ عَلَيْهِ يَتَوَكَّلُ ٱلْمُتَوَكِّلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால், வானங்களையும் பூமியையும் யார் படைத்தான் என்று? அவர்கள் கூறுவார்கள்: அல்லாஹ் என்று. (நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைப்பவை - வணங்குபவைப் பற்றி நீங்கள் அறிவியுங்கள்! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவை அவனது தீங்கை நீக்கக்கூடியவையா? அல்லது அவன் எனக்கு ஓர் அருளை நாடினால் அவை அவனது அருளை தடுத்துவிடக் கூடியவையா? (நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே நம்பிக்கை வைக்கட்டும்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால், வானங்களையும் பூமியையும் யார் படைத்தான் என்று? அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்: “அல்லாஹ்” என்று. (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைப்பவை (-வணங்குபவை)ப் பற்றி நீங்கள் அறிவியுங்கள்! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவை அவனது தீங்கை (என்னை விட்டு) நீக்கிவிடக்கூடியவையா? அல்லது, அவன் எனக்கு ஓர் அருளை நாடினால் அவை அவனது அருளை (என்னை விட்டும்) தடுத்துவிடக்கூடியவையா?” (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீது மட்டுமே நம்பிக்கை வைக்கவும்.”
Tamil Translation - Abdulhamid Baqawi38. (நபியே!) வானங்களையும் பூமியையும், படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், ‘‘அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். மேலும், (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கிழைக்க நாடினால், (நீங்கள் தெய்வங்களென அழைக்கும் அல்லாஹ் அல்லாத) அவை அத்தீங்கை நீக்கிவிட முடியுமா என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அல்லது அவன் எனக்கு ஏதும் அருள்புரிய நாடினால், அவனுடைய அருளை இவை தடுத்துவிடுமா (என்பதையும் நீங்கள் கவனித்தீர்களா)? (நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ் (ஒருவனே) எனக்குப் போதுமானவன். நம்பக்கூடியவர்கள் அனைவரும் அவனையே நம்பவும்.''