أَلَيْسَ ٱللَّهُ بِكَافٍ عَبْدَهُۥ وَيُخَوِّفُونَكَ بِٱلَّذِينَ مِن دُونِهِۦ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் தனது அடியானுக்கு போதுமானவனாக இல்லையா? அவர்கள் உம்மை அவன் அல்லாதவர்களைக் கொண்டு (அந்த சிலைகள் உமக்கு தீங்கு செய்துவிடும் என்று) பயமுறுத்துகின்றனர். யாரை அல்லாஹ் வழிகெடுத்து விடுகின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் தனது அடியானுக்கு போதுமானவனாக இல்லையா? அவர்கள் உம்மை அவன் அல்லாதவர்களைக் கொண்டு (-அந்த சிலைகள் உமக்கு தீங்கு செய்துவிடும் என்று) பயமுறுத்துகிறார்கள். யாரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi36. தன் அடியாருக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனாக இல்லையா? (நபியே!) அவர்கள் (தங்கள் தெய்வங்களாகிய) அல்லாஹ் அல்லாதவற்றைப் பற்றி உங்களை பயமுறுத்துகின்றனர். (அதை நீர் பொருட்படுத்த வேண்டாம்.) எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.