caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yaseen அத்தியாயம், வசனம் 19

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 41 · 36:19

قَالُوا۟ طَٰٓئِرُكُم مَّعَكُمْ أَئِن ذُكِّرْتُم بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறினர்: உங்கள் துர்ச்சகுனம் உங்களுடன்தான். நீங்கள் அறிவுறுத்தப்பட்டாலுமா (இப்படி மூடர்களாக நடப்பீர்கள்)? மாறாக, நீங்கள் வரம்பு மீறுகின்ற மக்கள் ஆவீர்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறினார்கள்: உங்கள் துர்ச்சகுனம் உங்களுடன்தான். நீங்கள் (தெளிவாக அழகிய முறையில்) அறிவுறுத்தப்பட்டாலுமா (இப்படி மூடர்களாக நடப்பீர்கள்)? மாறாக, நீங்கள் வரம்பு மீறுகிற மக்கள் ஆவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. அதற்கு (நம் தூதர்கள்) “உங்கள் கெட்ட சகுனம் உங்களிடம்தான் இருக்கிறது. உங்களுக்கு நல்லறிவைப் புகட்டியதற்காகவா? (எங்களைக் கெட்ட சகுனம் என்று கூறுகிறீர்கள்). அது சரியன்று; நீங்கள்தான் வரம்புமீறிய மக்கள்'' என்று கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70