caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yaseen அத்தியாயம், வசனம் 18

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 41 · 36:18

قَالُوٓا۟ إِنَّا تَطَيَّرْنَا بِكُمْ لَئِن لَّمْ تَنتَهُوا۟ لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறினர்: நாங்கள் உங்களை துர்ச்சகுனமாக கருதுகின்றோம். நீங்கள் விலகவில்லை என்றால் நிச்சயமாக நாங்கள் உங்களை கல்லால் எறிவோம். இன்னும் எங்களிடமிருந்து வலிமிகுந்த வேதனை நிச்சயமாக உங்களை வந்தடையும்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறினார்கள்: “நாங்கள் உங்களை துர்ச்சகுனமாக கருதுகின்றோம். நீங்கள் விலகவில்லை என்றால் நிச்சயமாக நாங்கள் உங்களை கல்லால் எறி(ந்து கொன்று விடு)வோம். இன்னும், எங்களிடமிருந்து துன்புறுத்தும் தண்டனை நிச்சயமாக உங்களை வந்தடையும்.”
Tamil Translation - Abdulhamid Baqawi18. அதற்கவர்கள் “நாங்கள் உங்கள் வருகையை நிச்சயமாக கெட்ட சகுனமாக நினைக்கிறோம். நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவோம். மேலும், எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனையும் உங்களைப் பிடித்துக் கொள்ளும்'' என்று கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70