ثُمَّ أَوْرَثْنَا ٱلْكِتَٰبَ ٱلَّذِينَ ٱصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا فَمِنْهُمْ ظَالِمٌ لِّنَفْسِهِۦ وَمِنْهُم مُّقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌۢ بِٱلْخَيْرَٰتِ بِإِذْنِ ٱللَّهِ ذَٰلِكَ هُوَ ٱلْفَضْلُ ٱلْكَبِيرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு இந்த வேதத்தை நமது அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு கொடுத்தோம். அவர்களில் தனக்குத் தானே தீமை செய்தவரும் இருக்கின்றார். அவர்களில் நடுநிலையானவரும் இருக்கின்றார். இன்னும் அவர்களில் அல்லாஹ்வின் அனுமதிப்படி நன்மைகளில் முந்துகின்றவரும் இருக்கின்றார். இதுதான் மாபெரும் சிறப்பாகும்.
Tamil Translation - Omar Sharifபிறகு, இந்த வேதத்தை நமது அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு (கற்பித்து) கொடுத்தோம். அவர்களில் தனக்குத் தானே தீமை செய்தவரும் இருக்கிறார். அவர்களில் (அமல்களில்) நடுநிலையானவரும் இருக்கிறார். இன்னும், அவர்களில் அல்லாஹ்வின் அனுமதிப்படி நன்மைகளில் முந்தி செல்பவரும் இருக்கிறார். இதுதான் மாபெரும் சிறப்பாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. பின்னர், நம் அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம். எனினும், அவர்களில் பலர் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்; வேறு சிலர் நிதானமாக நடந்து கொண்டனர். மற்றும் சிலரோ அல்லாஹ்வுடைய கட்டளைப்படி நன்மையான காரியங்களில் முந்திக் கொள்கின்றனர். இதுவே மிகப் பெரும் பாக்கியமாகும்.