قُلْ مَا سَأَلْتُكُم مِّنْ أَجْرٍ فَهُوَ لَكُمْ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَى ٱللَّهِ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! நான் எதை கூலியாக உங்களிடம் கேட்டேனோ அது உங்களுக்கே. (நான் உங்களுக்கு எடுத்துரைத்த அனைத்தும் உங்கள் நன்மைக்காவே. நான் உங்களிடம் இதற்கு எதையும் கூலியாக கேட்கவில்லையே!) எனது கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. அவன்தான் அனைத்தின் மீதும் சாட்சியாளன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! நான் எதைக் கூலியாக உங்களிடம் கேட்டேனோ அது உங்களுக்கே இருக்கட்டும். (நான் உங்களுக்கு எடுத்துரைத்த அனைத்தும் உங்கள் நன்மைக்காகவே. நான் உங்களிடம் இதற்கு எதையும் கூலியாக கேட்கவில்லை!) எனது கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. அவன்தான் (எனது செயல்கள்; இன்னும், உங்கள் செயல்கள்) அனைத்தின் மீதும் சாட்சியாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi47. (நபியே! மேலும்) கூறுவீராக: ‘‘நான் உங்களிடத்தில் ஏதும் கூலியைக் கேட்டிருந்தால் அது உங்களுக்கே சொந்தம் ஆகட்டும். என் கூலி அல்லாஹ்விடமே தவிர (உங்களிடம்) இல்லை. அவன் அனைத்திற்கும் (அவற்றை நன்கறிந்த) சாட்சி ஆவான்.