وَكَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَمَا بَلَغُوا۟ مِعْشَارَ مَآ ءَاتَيْنَٰهُمْ فَكَذَّبُوا۟ رُسُلِى فَكَيْفَ كَانَ نَكِيرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களுக்கு முன்னுள்ளவர்களும் பொய்ப்பித்தனர். இவர்கள் (நிராகரிக்கின்ற மக்காவாசிகள்) அவர்களுக்கு (-முன் சென்ற சமுதாயத்திற்கு) நாம் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட அடையவில்லை. இருந்தும் அவர்கள் (முந்திய கால காஃபிர்கள்) எனது தூதர்களை பொய்ப்பித்தனர். எனது மாற்றம் (-நான் அவர்களுக்குச் செய்த அருளை எடுத்துவிட்டு அவர்களுக்குக் கொடுத்த தண்டனை) எப்படி இருந்தது (என்று பாருங்கள்)!
Tamil Translation - Omar Sharifஇவர்களுக்கு முன்னுள்ளவர்களும் பொய்ப்பித்தனர். இவர்கள் (நிராகரிக்கின்ற இந்த மக்காவாசிகள்) அவர்களுக்கு (-முன் சென்ற சமுதாயத்திற்கு) நாம் கொடுத்த (செல்வத்)தில் பத்தில் ஒன்றைக் கூட அடையவில்லை. இருந்தும் அவர்கள் (முந்தியக் கால காஃபிர்கள்) எனது தூதர்களை பொய்ப்பித்தனர். எனது மாற்றம் (-நான் அவர்களுக்குச் செய்த அருளை எடுத்துவிட்டு அவர்களுக்குக் கொடுத்த தண்டனை) எப்படி இருந்தது (என்று மக்கா வாசிகளே பாருங்கள்)!
Tamil Translation - Abdulhamid Baqawi45. இவர்களுக்கு முன்னிருந்த (அரபிகளல்லாத)வர்களும் மற்ற (தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கினார்கள். அவர்களுக்கு நாம் கொடுத்திருந்ததில் பத்தில் ஒரு பாகத்தையும் இவர்கள் அடைந்து விடவில்லை. (அதற்குள்ளாகவே) இவர்கள் எனது தூதர்களைப் பொய்யாக்க முற்பட்டு இருக்கின்றனர். (இவர்களுக்கு முன்னர் நம் தூதர்களை நிராகரித்து பொய்யாக்கியவர்களை) நான் தண்டித்தது எவ்வாறாயிற்று? (என்பதை இவர்கள் கவனிப்பார்களாக)