قُلْ يَجْمَعُ بَيْنَنَا رَبُّنَا ثُمَّ يَفْتَحُ بَيْنَنَا بِٱلْحَقِّ وَهُوَ ٱلْفَتَّاحُ ٱلْعَلِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! நமது இறைவன் நமக்கு மத்தியில் ஒன்று சேர்ப்பான். பிறகு, நமக்கு மத்தியில் உண்மையைக் கொண்டு அவன் தீர்ப்பளிப்பான். அவன்தான் உண்மையான தீர்ப்பளிப்பவன், நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! நமது இறைவன் நமக்கு மத்தியில் ஒன்று சேர்ப்பான். பிறகு, நமக்கு மத்தியில் உண்மையான (நீதமான) தீர்ப்பை தீர்ப்பளிப்பான். அவன்தான் மகா நீதமான தீர்ப்பாளன், நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi26. (நபியே!) கூறுவீராக: ‘‘முடிவில் (மறுமை நாளில்) நமது இறைவன் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து, பிறகு நமக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிப்பான். அவன் தீர்ப்பளிப்பதில் மிக்க மேலானவனும் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஆவான்.''