فَذُوقُوا۟ بِمَا نَسِيتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هَٰذَآ إِنَّا نَسِينَٰكُمْ وَذُوقُوا۟ عَذَابَ ٱلْخُلْدِ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்த காரணத்தால் (நரக வேதனையை) சுவையுங்கள்! நிச்சயமாக நாம் உங்களை மறந்து விட்டோம். (உங்களது கோரிக்கைகளைப் புறக்கணிப்போம்). இன்னும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக நிரந்தரமான வேதனையை சுவையுங்கள்!
Tamil Translation - Omar Sharifஆக, நீங்கள் உங்கள் இந்த நாளின் சந்திப்பை மறந்த காரணத்தால் (நரக தண்டனையை) சுவையுங்கள்! நிச்சயமாக நாம் உங்களை (நரக தண்டனையில்) விட்டுவிடுவோம். இன்னும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக நிரந்தரமான தண்டனையை சுவையுங்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi14. ஆகவே, ‘‘ (நம்மைச்) சந்திக்கும் இந்நாளை நீங்கள் மறந்துவிட்டதன் பலனை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (இந்நாளை நீங்கள் மறந்தவாறே) நிச்சயமாக நாமும் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக என்றென்றும் நிலையான இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருங்கள்'' (என்றும் கூறப்படும்).