caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Luqman அத்தியாயம், வசனம் 25

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 57 · 31:25

وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ لَيَقُولُنَّ ٱللَّهُ قُلِ ٱلْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களையும் பூமியையும் எவன் படைத்தான் என்று அவர்களிடம் நீர் கேட்டால், அல்லாஹ்தான் (படைத்தான்) என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!” என்று கூறுவீராக! மாறாக, அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifயார் வானங்களையும் பூமியையும் படைத்தான் என்று அவர்களிடம் நீர் கேட்டால், அல்லாஹ்தான் (படைத்தான்) என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!” என்று கூறுவீராக! மாறாக, அவர்களில் அதிகமானோர் (படைத்தவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை) அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. (நபியே!) ‘‘ வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?'' என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாகக் கூறுவார்கள். (அதற்கு, ‘‘ இவ்வளவேனும் உங்களுக்கு அறிவு இருப்பது பற்றி) அல்லாஹ்வை நான் புகழ்கிறேன்'' என்று நீர் கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இறைவனை இவ்வாறு புகழ்ந்து துதி செய்ய) அறிய மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70