caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Luqman அத்தியாயம், வசனம் 23

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 57 · 31:23

وَمَن كَفَرَ فَلَا يَحْزُنكَ كُفْرُهُۥٓ إِلَيْنَا مَرْجِعُهُمْ فَنُنَبِّئُهُم بِمَا عَمِلُوٓا۟ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு உம்மை கவலைப்படுத்த வேண்டாம். நம் பக்கம்தான் அ(த்தகைய)வர்களின் மீளுமிடம் இருக்கின்றது. அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எவர் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு உம்மை கவலைப்படுத்த வேண்டாம். நம் பக்கம்தான் அ(த்தகைய)வர்களின் மீளுமிடம் இருக்கிறது. ஆக, அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. (நபியே!) எவரேனும் (உம்மை) நிராகரித்து விட்டால், அவர்களுடைய நிராகரிப்பு உம்மைத் துக்கத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்கள் நம்மிடமே வரவேண்டும். அச்சமயம் அவர்களுடைய (இச்)செயலைப் பற்றி நாம் அவர்களுக்கு அறிவுறுத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70