وَعْدَ ٱللَّهِ لَا يُخْلِفُ ٱللَّهُ وَعْدَهُۥ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் (இதை) வாக்களிக்கின்றான். அல்லாஹ் தனது வாக்கை மாற்ற மாட்டான். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறியமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(இதை) அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அல்லாஹ் தனது வாக்கை மாற்ற மாட்டான். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் வாக்கு உண்மை என்பதை) அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. (இது) அல்லாஹ்வுடைய வாக்குறுதியாகும். அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறுவதில்லை. எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியமாட்டார்கள்.