فَـَٔاتِ ذَا ٱلْقُرْبَىٰ حَقَّهُۥ وَٱلْمِسْكِينَ وَٱبْنَ ٱلسَّبِيلِ ذَٰلِكَ خَيْرٌ لِّلَّذِينَ يُرِيدُونَ وَجْهَ ٱللَّهِ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, உறவினருக்கு அவருடைய உரிமையையும் வறியவருக்கும் வழிப்போக்கருக்கும் (அவரவர்களுடைய உரிமைகளையும்) கொடுப்பீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுதான் சிறந்ததாகும். இவர்கள்தான் வெற்றியாளர்கள்.
Tamil Translation - Omar Sharifஆகவே, உறவினர்கள், வறியவர்கள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்கு அவர்களின் உரிமைகளை கொடுப்பீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இ(வ்வாறு தர்மம் கொடுப்ப)துதான் சிறந்ததாகும். இன்னும், இவர்கள்தான் வெற்றியாளர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi38. (நபியே! உமது பொருளில்) உறவினருக்கு அவரின் உரிமையை கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் (அவர்களுடைய உரிமையைக் கொடுத்து வருவீராக). எவர்கள் அல்லாஹ்வுடைய முகத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இதுவே மிக்க நன்றாகும். இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.