caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 97

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:97

فِيهِ ءَايَٰتٌۢ بَيِّنَٰتٌ مَّقَامُ إِبْرَٰهِيمَ وَمَن دَخَلَهُۥ كَانَ ءَامِنًا وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلْبَيْتِ مَنِ ٱسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِىٌّ عَنِ ٱلْعَٰلَمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (அவற்றில் ஒன்று,) இப்ராஹீம் நின்ற இடம். எவர் அதில் நுழைகிறாரோ அவர் அச்சமற்றவராக ஆகிவிடுவார். அல்லாஹ்வுக்காக (அந்த) இல்லத்தை ஹஜ் செய்வது அதன் பக்கம் பாதையால் சக்தி பெற்ற மக்கள் மீது கடமையாகும். எவர் நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்களை விட்டும் தேவையற்றவன்.
Tamil Translation - Omar Sharifஅதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (அவற்றில் ஒன்று,) இப்ராஹீம் நின்ற இடம். இன்னும், எவர் அ(ந்த இறை ஆலயத்)தில் நுழைகிறாரோ அவர் அச்சமற்றவராக ஆகிவிடுவார். அல்லாஹ்வுக்காக (அந்த) இல்லத்தை ஹஜ் செய்வது அங்கே சென்றுவர சக்தி பெற்ற மக்கள் மீது கடமையாகும். எவர் நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்களை விட்டும் முற்றிலும் தேவையற்றவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi97. அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கிறது. எவர் அதில் நுழைகிறாரோ அவர் (பாதுகாப்புப் பெற்று) அச்சமற்றவராகி விடுகிறார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கிறார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70