كَيْفَ يَهْدِى ٱللَّهُ قَوْمًا كَفَرُوا۟ بَعْدَ إِيمَٰنِهِمْ وَشَهِدُوٓا۟ أَنَّ ٱلرَّسُولَ حَقٌّ وَجَآءَهُمُ ٱلْبَيِّنَٰتُ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் எவ்வாறு நேர்வழி செலுத்துவான்! தாங்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் நிராகரித்த கூட்டத்தை; நிச்சயமாக தூதர் உண்மையானவர் என்று சாட்சி கூறி, தங்களிடம் தெளிவான சான்றுகள் வந்தன. அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் சில மக்களை எவ்வாறு நேர்வழி செலுத்துவான்! அவர்களோ நம்பிக்கை கொண்டு, “நிச்சயமாக இந்த தூதர் உண்மையானவர்” என்று சாட்சி கூறினார்கள். இன்னும், அவர்களிடம் தெளிவான சான்றுகள் வந்தன. ஆனால், அவர்கள் அதற்குப் பின்னர் (மனமுரண்டாக) நிராகரித்தார்கள். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi86. அல்லாஹ் எப்படி ஒரு சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவான். அவர்களோ, தங்களிடம் வந்த பல அத்தாட்சிகளின் மூலம் நிச்சயமாக (அல்லாஹ்வுடைய) தூதர் உண்மையானவர் என சாட்சியம் கூறி நம்பிக்கை கொண்டதன் பின்னரும் (அத்தூதரை) நிராகரிக்கின்றனர். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவதில்லை.