فَمَنْ حَآجَّكَ فِيهِ مِنۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ فَقُلْ تَعَالَوْا۟ نَدْعُ أَبْنَآءَنَا وَأَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَتَ ٱللَّهِ عَلَى ٱلْكَٰذِبِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, (நபியே! இதைப்பற்றிய) கல்வி உமக்கு வந்த பின்னர் இதில் யாராவது உம்மிடம் தர்க்கித்தால், கூறுவீராக: "வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைப்போம். (அனைவரும் ஒன்றுகூடி) பிறகு, பிரார்த்திப்போம்: பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை ஆக்குவோம்."
Tamil Translation - Omar Sharifஆக, (நபியே! இதைப்பற்றிய) கல்வி உமக்கு வந்த பின்னர் இதில் யாராவது உம்மிடம் தர்க்கித்தால், (அவர்களை நோக்கி) கூறுவீராக: “வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைப்போம். பிறகு, (அனைவரும் ஒன்றுகூடி) மிகுந்த பயத்தோடும் பணிவோடும் மன்றாடி பிரார்த்திப்போம். இன்னும், பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை ஆக்குவோம்.’’
Tamil Translation - Abdulhamid Baqawi61. (நபியே!) இதைப் பற்றி உமக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உம்மிடம் எவரும் தர்க்கித்தால் (அவர்களுக்கு) கூறுவீராக: ‘‘வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று சேர்த்து) வைத்துக் கொண்டு (ஒவ்வொருவரும் நாம் கூறுவதுதான் உண்மையென) சத்தியம் செய்து (இதற்கு மாறாகக் கூறும்) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என பிரார்த்திப்போம்'' (என்று கூறும்படி கட்டளையிட்டான். இவ்வாறு நபியவர்கள் அழைத்த சமயத்தில் ஒருவருமே இப்படி சத்தியம் செய்ய முன்வரவில்லை.)