قَالَتْ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِى وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِى بَشَرٌ قَالَ كَذَٰلِكِ ٱللَّهُ يَخْلُقُ مَا يَشَآءُ إِذَا قَضَىٰٓ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"என் இறைவா! ஓர் ஆடவரும் என்னைத் தொடாமல் இருக்க, எனக்கு எவ்வாறு குழந்தை ஏற்படும்?" என்று (மர்யம்) கூறினார். "(காரியம்) இவ்வாறுதான், அல்லாஹ் தான் நாடியதை படைக்கிறான். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அதற்கு அவன் கூறுவதெல்லாம் ‘ஆகுகÕ என்றுதான். உடனே (அது) ஆகிவிடும்" என்று (அல்லாஹ்) கூறினான்.
Tamil Translation - Omar Sharif“என் இறைவா! ஆடவர் ஒருவரும் என்னைத் தொடாமல் இருக்க, எனக்கு எப்படி குழந்தை ஏற்படும்?’’ என்று (மர்யம்) கூறினார். “(அல்லாஹ்வின் நாட்டம்) இவ்வாறுதான், அல்லாஹ், தான் நாடியதை (நாடியபடி) படைக்கிறான். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அதற்கு அவன் கூறுவதெல்லாம் ‘ஆகுக’ என்றுதான். உடனே (அது) ஆகிவிடும்” என்று அல்லாஹ் கூறினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi47. (அதற்கு மர்யம், தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! (மனிதர்களில்) ஒருவருமே என்னைத் தீண்டாதிருக்கும் போது, எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டு விடும்?'' என்று கூறினார். (அதற்கு) ‘‘இப்படித்தான், அல்லாஹ் தான் நாடியதை படைக்கிறான். அவன் ஒரு பொருளை (படைக்க) நாடினால் அதை ‘ஆகுக' என அவன் கூறியவுடனே அது ஆகிவிடும்'' என்று கூறினான்.