لَا تَحْسَبَنَّ ٱلَّذِينَ يَفْرَحُونَ بِمَآ أَتَوا۟ وَّيُحِبُّونَ أَن يُحْمَدُوا۟ بِمَا لَمْ يَفْعَلُوا۟ فَلَا تَحْسَبَنَّهُم بِمَفَازَةٍ مِّنَ ٱلْعَذَابِ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே! செயல்களில்) தாங்கள் செய்ததின் மூலம் மகிழ்ச்சியடைந்து, தாங்கள் செய்யாதவற்றின் மூலம் தாங்கள் புகழப்படுவதை விரும்புகின்றவர்கள் வேதனையிலிருந்து பாதுகாப்பில் இருப்பதாக நிச்சயம் (நீர்) எண்ணாதீர். அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.
Tamil Translation - Omar Sharif(நபியே! செயல்களில்) எவர்கள் அவர்கள் செய்த(தீய)தின் மூலம் மகிழ்ச்சி அடைகிறார்களோ; இன்னும், அவர்கள் செய்யாத (நல்ல)வற்றைக் கொண்டு அவர்கள் புகழப்படுவதை விரும்புகிறார்களோ அத்தகையவர்கள் தண்டனையிலிருந்து பாதுகாப்பில் இருப்பதாக நிச்சயம் நீர் எண்ணாதீர்! துன்புறுத்தும் தண்டனை (கண்டிப்பாக) அவர்களுக்கு உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi188. (நபியே!) எவர்கள் தாங்கள் செய்த (அற்ப) காரியத்தைப் பற்றி மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாத (நன்மையான) காரியங்களைப் பற்றியும், (தாம் செய்ததாக மக்கள்) தம்மைப் புகழ்வதை விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்று நிச்சயமாக (ஒரு காலமும்) நீர் எண்ண வேண்டாம். கண்டிப்பாக அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.