أَفَمَنِ ٱتَّبَعَ رِضْوَٰنَ ٱللَّهِ كَمَنۢ بَآءَ بِسَخَطٍ مِّنَ ٱللَّهِ وَمَأْوَىٰهُ جَهَنَّمُ وَبِئْسَ ٱلْمَصِيرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றியவர் அல்லாஹ்வின் கோபத்துடன் திரும்பியவனைப் போல் ஆவாரா? அவனுடைய தங்குமிடம் நரகம் ஆகும். (அந்த) மீளுமிடம் கெட்டுவிட்டது.
Tamil Translation - Omar Sharifஆக, யார் (நேர்மையாக நடப்பதில்) அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினாரோ அவர், யார் (மோசடி செய்து) அல்லாஹ்வின் கோபத்தை சுமந்தாரோ, இன்னும் அவருடைய தங்குமிடம் நரகமாக ஆகிவிட்டதோ அவரைப் போன்று ஆகுவாரா? அ(ந்த நரகமான)து மிக கெட்ட மீளுமிடமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi162. அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றுபவர் அல்லாஹ்வின் கோபத்தில் சிக்கியவனைப் போல் ஆவாரா? (அல்ல! கோபத்தில் சிக்கிய) அவனின் தங்குமிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்.